TAMILVIYUGAM.COM,17/9/2026 நானாட்டான் அகோர விகார மகாமாரி அருள்மிகு ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தின் பஞ்சதள இராஜகோபுர மகா கும்பாபிஷேகப் ...
TAMILVIYUGAM.COM,17/9/2026
நானாட்டான் அகோர விகார மகாமாரி அருள்மிகு ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தின் பஞ்சதள இராஜகோபுர மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (17-09-2026) மிகக் கோலாகலமாகவும் பக்தியுணர்வுடனும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இராஜகோபுரப் பணி கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அம்பிகையின் அருளோடும், பிரதேச மக்களின் பெரும் முயற்சியோடும் இந்த ஐந்து தளங்களைக் கொண்ட இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இயற்கையின் அனுக்கிரகத்தாலும், அம்பிகையின் பேரருளினாலும், ஊர் மக்களின் மற்றும் தொண்டர்களின் இடைவிடாத உழைப்பினால் பஞ்சதள இராஜகோபுரம் கம்பீரமாக உருப்பெற்று, இன்று மகா கும்பாபிஷேகம் கண்டுள்ளது.
நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய புராண பூர்வீக தல வரலாறு-ஜெகன் journalist
நான்கு நாள் கும்பாபிஷேக திருவிழா நிகழ்வுகள்
14.09.2026 (திங்கட்கிழமை): அதிகாலை 5.30 மணியளவில் கர்மாரம்ப நிகழ்வுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகின.
15.09.2026 (செவ்வாய்க்கிழமை - ஆவணி 29): காலை 6.30 மணி முதல் புண்ணியாவாசனம், விசேட சந்தி மற்றும் யாக பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.
16.09.2026 (புதன்கிழமை - ஆவணி 30): காலை 8.00 மணி முதல் திரளான அடியார்கள் பங்கேற்ற எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது.
17.09.2026 (வியாழக்கிழமை - ஆவணி 31): கும்பாபிஷேகத்தின் முக்கிய நாளான இன்று காலை 7.30 மணிக்கு புண்ணியாவாசனம், யாகபூஜை, குண்டபூஜை என்பன நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சுபமுகூர்த்த வேளையில் (காலை 10.10 - 11.15) பஞ்சதள இராஜகோபுர ஸ்தூபிகளுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிர்வாகத்தினர் மற்றும் தொண்டர்களின் மகத்தான சேவை இப்பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு ஆலய நிர்வாகத்தினரும், தொண்டர்களும் மிகச்சிறந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.
ஆலய வளாகத்தைச் சுத்தப்படுத்தி அழகுபடுத்துதல், பந்தல் அமைத்தல், வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருதல் எனத் தங்களின் பணிகளை மிகச் செவ்வனே செய்து முடித்தனர்.
@tamilviyugam


.jpg)




No comments