TAMILVIYUGAM.COM,17/9/2026 மன்னாரில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட பெறுமதியான தங்கச் சங்கிலி ...
TAMILVIYUGAM.COM,17/9/2026
மன்னாரில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் பணப் பையை பாதுகாப்பாக மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரின் முன்மாதிரியான செயலைப் பாராட்டி, மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
நடைபெற்ற சம்பவம் Viyugam News
நேற்று புதன்கிழமை (16-09-2026) காலை 5:30 மணியளவில் மன்னார் நகரப் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கி தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது. இப்படகில் சாரதியாக முருகையா மகேஸ்வரன் என்பவரும், நடத்துனராக டெனிஸ் என்பவரும் கடமையாற்றியுள்ளனர்.
தலைமன்னாரில் கைதான 9 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை மன்னார் நீதிமன்றம் உத்தரவு
பேருந்து பயணித்த போது தர்மபுரம் பகுதியில் பேருந்தில் ஏறிய பெண் பயணி ஒருவர், தவறுதலாகத் தனது பணப்பையை பேருந்திலேயே விட்டுச் சென்றுள்ளார். பேருந்தில் இருந்த பணப்பையை அவதானித்த சாரதியும் நடத்துனரும் அதனை மீட்டு பரிசோதித்த போது, அதற்குள் தேசிய அடையாள அட்டை, பெறுமதிமிக்க தங்கச் சங்கிலி மற்றும் ஒரு தொகை பணம் ஆகியவை இருப்பதை கண்டறிந்தனர்.
உடனடி நடவடிக்கை
சற்று தாமதிக்காது விரைந்து செயற்பட்ட சாரதி முருகையா மகேஸ்வரன் மற்றும் நடத்துனர் டெனிஸ் ஆகியோர், மீட்கப்பட்ட பணப்பையை மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ரி.ரமேஷ் அவர்களிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து அடையாள அட்டையின் உதவியுடன் குறித்த பெண் பயணி உடனடியாக அடையாளம் காணப்பட்டு, அவரிடம் பொருட்கள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாவட்டச் செயலகத்தில் கௌரவிப்பு
சாரதி மற்றும் நடத்துனரின் இந்த நேர்மையான மற்றும் முன்மாதிரியான செயலை கௌரவிக்கும் வகையில், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ. விமலேஸ்வரன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (17-09-2026) மன்னார் மாவட்டச் செயலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் எம். பிரதீப், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் மற்றும் மன்னார் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரி. ரமேஸ் ஆகியோர் கலந்துகொண்டு, சாரதி மற்றும் நடத்துனருக்கு பொன்னாடை போர்த்தித் தங்களின் பாராட்டுக்களையும் கௌரவத்தையும் வழங்கி வாழ்த்தினர்.
@tamilviyugam


No comments