Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னாரில் மனித உரிமை ஆணைக்குழுவின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு-தமிழ் வியூகம்

TAMILVIYUGAM.COM இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் மாவட்ட பிரதான அலுவலகத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழா இன்று (2026.10.02) காலை 09.0...

TAMILVIYUGAM.COM

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் மாவட்ட பிரதான அலுவலகத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழா இன்று (2026.10.02) காலை 09.00 மணிக்கு  சிறப்பாக நடைபெற்றது.   

இப்புதிய அலுவலகத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கௌரவ ஆணையாளர் சட்டத்தரணி நிமல் ஜீ புஞ்சிஹேவா அவர்கள் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இதுவரை காலமும் மன்னார் மாவட்டத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப அலுவலகமே இயங்கி வந்த நிலையில், இன்று முதல் இது ஒரு பிரதான அலுவலகமாகத் தரம் உயர்த்தப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மன்னார் மாவட்டப் பொதுமக்கள் மனித உரிமைகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதாயின் வவுனியா அலுவலகத்திற்கே செல்ல வேண்டியிருந்தது. 

இதனால் நீண்ட தூரப் பயணம், அதிக போக்குவரத்துச் செலவு மற்றும் நேர விரயம் போன்ற பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்நோக்கினர். 

ஆனால், இன்றைய தினம் மன்னாரிலேயே பிரதான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பணிகளில் தீவிரமாகச் செயல்பட விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரிகளான செயலாளர் திரு. G.P.D. பெர்னாண்டோ   திரு. ஜெயதிலக்க இந்திக   நிதிப் பிரிவு அதிகாரி திரு. லால் வீரசிங்க   விசாரணை மற்றும் புலனாய்வுப் பணிப்பாளர் திரு. கபிலன் வில்வராஜன்   திரு. காலிஸ்டஸ் அருணகுமார   சட்ட உத்தியோகத்தர்   மன்னார் மாவட்ட மனித உரிமைகள் உத்தியோகத்தர் திரு. M.T.M. இர்ஷாத்  போன்ற அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்

மேலும், சிறப்பு அதிதிகளாக மன்னார் மாவட்டச் செயலாளர், வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் இலங்கை இராணுவத்தின் 54வது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

இதன் அலுவலகம்  மன்னாரில் இலக்கம் 190/10நல்லாயன் வீதி பெட்டா, எனும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

No comments