Page Nav

HIDE

Breaking News:

latest

வவுனியா பொது வைத்தியசாலையில் 4 மாடி தாதியர் குடியிருப்பு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

TAMILVIYUGAM.COM,17/9/2026 வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்களின் நீண்டகால இருப்பிடப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வை...

TAMILVIYUGAM.COM,17/9/2026

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்களின் நீண்டகால இருப்பிடப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 48 தாதிய உத்தியோகத்தர்கள் தங்கியிருந்து சேவை ஆற்றுவதற்குத் தேவையான 4 மாடிகளைக் கொண்ட புதிய குடியிருப்பு வளாகம் அமைப்பதற்கு இன்று (17) காலை கோலாகலமாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் உட்பட உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

மன்னார் பேசாலையில் சோகம் பற்றைக்காட்டில் இருந்து இரு பிள்ளைகளின் தந்தையின் உடல் மீட்பு

திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு

குடியிருப்பு வளாகம் வடமாகாண சபை நிதியிலிருந்து ரூ. 170.04 மில்லியன் செலவில் இப்புதிய 4 மாடி தாதியர் விடுதி நிர்மாணிக்கப்படுகிறது. இதன் கட்டுமானப் பணிகளை 2027 ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவு வவுனியா மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 235 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.Viyugam News

புதிய நியமனங்கள் வடமாகாண சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில் விரைவில் 300 சுகாதார உதவியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், மருத்துவமனைகளுக்குத் தேவையான புதிய நவீன மருத்துவ உபகரணங்களைப் பெற்றுத்தரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிராந்திய சுகாதார மேம்பாடு இந்திய நிதியுதவி மற்றும் மாகாண சபை நிதியின் கீழ் மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் சுமார் ரூ. 1500 மில்லியன் பெறுமதியான பிரமாண்ட சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதன்மைச் செயலாளர் தனுஜா முருகேசன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பி.எஸ்.டி. பத்திரன, வைத்தியசாலைப் பணிப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

@tamilviyugam

No comments