Page Nav

HIDE

Breaking News:

latest

சாரதி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் ஒரே நாளில் பெறுவது எப்படி புதியமுறைமை என்ன?

TAMILVIYUGAM.COM, உங்களுடைய சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு இலகுவாக புதுப்பித்துக் கொள்வது எப்படி புதியதாக இருக்கக்கூடிய வழிவகைதான் என்ன?  ...

TAMILVIYUGAM.COM,

உங்களுடைய சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு இலகுவாக புதுப்பித்துக் கொள்வது எப்படி புதியதாக இருக்கக்கூடிய வழிவகைதான் என்ன? 

முதலாவதாக  உங்களுடைய சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பிப்பதற்கு நீங்கள் மருத்துவ அறிக்கையை பெற வேண்டும். மருத்துவ அறிக்கை பெறுவதற்காக நீங்கள் ஒன்லைன் மூலமாக  நீங்கள் புக்கிங் செய்து கொள்ள வேண்டும். அதற்கு

 www. ntmi.lk இந்த இணையதளத்திற்குள் சென்று நீங்கள் புக்கிங் செய்து கொள்ளலாம் அல்லது 1225 அல்லது 225 என்கின்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி பதிவு செய்ய முடியும்  

 மருத்துவ பரிசோதனைக்காக உங்களுடைய ஆவணங்கள் அதாவது உங்களுடைய  அiயாள அட்டை  அல்லது உங்களுடைய பாஸ்போர்ட் இவை இரண்டோடும் சேர்த்து உங்களுடைய பழைய சாரதி அனுமதிப்பத்திரம் இதனையும் நீங்கள் எடுத்துக்கொண்டு செல்லுங்கள். 

அங்கே உங்களுடைய பார்வையின் திறன்  இரத்த அழுத்தம் சக்கரை அளவு போன்றவைகள் எல்லாம் பரிசோதிக்கப்பட்டு உங்களுக்கென்று மருத்துவ அறிக்கை வழங்கப்படும்  இந்த மருத்துவ அறிக்கையானது ஆறு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என்பதையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

அடுத்ததாக உங்களுடைய சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்காக  dmtappointments.dmt.gov.lk இந்த இணையதள முகவரிக்கு சென்று நீங்கள் அதற்கும் ஒரு நாளை புக்கிங் செய்து கொள்ள வேண்டும்.   

பின்னர் உங்களுடைய மாகாணத்தில் இருக்கக்கூடிய அலுவலகத்திலோ அல்லது வேறு பிரதான அலுவலகத்திற்கோ சென்று அங்கே உங்களுடைய லைசென்ஸை புதுப்பித்துக் கொள்வதற்கான ஒரு விண்ணப்பப் படிவம் இருக்கும். 

அல்லது  ஒன்லைன் மூலமாக அந்த விண்ணப்ப படிவத்தை  தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த விண்ணப்பத்தையும் நீங்கள் முழுமையாக நிரப்பிக் கொள்ள வேண்டும்.  

 இப்போது உங்களுடைய   அப்ளிகேஷன் நீங்கள் எடுத்த மருத்துவ அறிக்கை உங்களுடைய அடையாள அட்டை உங்களுடைய பழைய சாரதி அனுமதிப்பத்திரம் இவை அனைத்தையும் எடுத்து நீங்கள் உடனடியாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் (Department of Motor Traffic - DMT) முகவரி: பொரலஸ்கமுவ, பேராலெகமுவ (Werahara, Boralesgamuwa). இது கொழும்பு நகருக்கு அருகில் அமைந்துள்ளது)பிரதான அலுவலகத்திற்கோ அல்லது உங்களுடைய மாகாணத்தில் இருக்கக்கூடிய அலுவலகத்திற்கோ சென்று கொடுக்கின்ற போது உங்களுடைய வாகன சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பித்துக் கொள்ள முடியும்.  

 உங்களுக்கு உடனே அதே நாளில் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் அதற்கு தனியாக நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி வரும்  அல்லது நீங்கள் சாதாரண சேவையை தான் பெற விரும்புகின்றீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு அஞ்சல் மூலமாக உங்களுடைய சாரதி அனுமதிப்பத்திரம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்

குறிப்பாக உங்களுடைய சாரதி அனுமதிப்பத்திரம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேல் சென்றிருந்தால் அதற்கு வேறாக நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி ருக்கும் என்பதனையும்  ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

@tamilviyugam

No comments