TAMILVIYUGAM.COM மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுற்றுலா தகவல் மையம் இன்று வியாழக்கிழம...
TAMILVIYUGAM.COM
மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுற்றுலா தகவல் மையம் இன்று வியாழக்கிழமை (15) காலை வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகே, நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள வங்காலை பறவைகள் சரணாலய வளாகத்திலேயே இப் புதிய மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்மையத்தில் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தரும் பறவையினங்களின் வகைகள் உட்பட மன்னார் மாவட்ட சுற்றுலா தொடர்பான பல விடயங்களை பெற்றக் கொள்ள முடியும்
சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்ரன் ஜயக்கொடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் இணைந்து சுற்றுலா தகவல் மையத்தைத் திறந்து வைத்தனர்.
கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் – தலைவர், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகம்
அரசாங்க அதிபர் மன்னார் க.கனகேஸ்வரன் உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் பிரித்தானிய தூதரக அலுவலர்கள்
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட (UNDP) பிரதிநிதிகள் மற்றும் அரச திணைக்களத் தலைவர்கள்
மையத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, அங்கே முன்னெடுக்கப் பட்டுள்ள சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
மேலும், கண்டல் தாவரங்கள் உட்பட அப்பகுதியின் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் எளிதில் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்ட பகுதிகளை வருகை தந்த விருந்தினர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.



No comments